நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – அதிபர் ரணில்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்று மக்களுக்கு இன்னலை விளைவிக்கும் அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதவாறு நாட்டினுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அனைத்து மக்களும் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர், இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி எமது மக்களின் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சட்ட நடவடிக்கைகள் எவ்வித தலையீடும் இன்றி சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் அவசியமான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் வருங்காலங்களில் நடைபெறாதபடி நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என வலியுறுத்துகிறேன்.” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.