News

தோல்வியடைந்த நாடாக மாறிய இலங்கை!

காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட, சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக – பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்தது.

எனினும் இன்று 75 வயதில், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டது என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசிய அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி என்பன இதனை இணையவழியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்துக்களை பகிர்ந்த போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூக குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறியிருக்கிறது.

எழுப்பத்தைந்து ஆண்டுகள் என்பது ஒரு தேசம் கணிசமான முன்னேற்றத்தை அடைய எடுக்கும் நீண்ட காலமாகும்.

ஊழல் மற்றும் முறையான தேசத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் தோல்வியே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

ராஜபக்சர்கள் காலத்தில், நீதித்துறை, காவல்துறை மற்றும் பொதுச் சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களில் பரவலான ஊழல் ஊடுருவியது.

அதேநேரம் இலங்கை, பல்லின மற்றும் சகல மத சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்கத் தவறிவிட்டது.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரப் பகிர்வு முறையை உறுதிப்படுத்த கடந்த 75 ஆண்டுகளாக தவறிவிட்டோம்.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு ‘ஜனநாயகமானது அல்ல’.

2000ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்புக்கான எனது சொந்த முன்மொழிவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை” – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button