News

இலங்கை விமான போக்குவரத்து சட்டத் திருத்தம்: இந்தியாவுக்கு அதிக இடம்…!

இலங்கை விமான போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் இந்தியாவுக்கு அதிக இடம் கிடைத்துள்ளதாக தி இக்கோனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் விமான நிலையங்களில் தரையைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இலங்கை அனுமதிக்கலாம் என்று தகவல் அறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

மேலும், விமானப் போக்குவரத்துத்துறையில் பொது-தனியார் பங்காளித்துவத்தை அனுமதிக்கும் வகையில் நாட்டின் சிவில் விமானச் சட்டத்தில் திருத்தம் செய்ய இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கும் என்று தி இக்கோனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2022 டிசம்பரில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துவதில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இலங்கை விமான போக்குவரத்து சட்டத் திருத்தம்: இந்தியாவுக்கு அதிக இடம்...! | Sri Lanka Aviation Act Amendment

அத்துடன், இரு நாட்டு மக்களுக்கும் இடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவது தவிர, வணிகத்தின் சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளுக்கு இது குறிப்பாகப் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், அதிக இந்திய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, அகமதாபாத் உட்பட, இந்தியாவில் உள்ள கூடுதல் மூன்று நகரங்களில் இருந்து தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கா எயார்லைஸ் தெரிவித்திருந்தது தற்போது, ஒன்பது இந்திய நகரங்களில் இருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் செயல்படுகிறது.

இலங்கையின் முதல் தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனம், கொழும்பு-சென்னை துறையில் தனது விமானச் சேவையைப் பெப்ரவரியில் ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்தியாவிலேயே அதன் முதல் இலக்கு சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button