News
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தாம் ஈடுபடத் தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளன உறுப்பினர்கள் மேற்படி பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டைப் புறக்கணித்திருந்தனர்.
அத்தோடு, தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.