News

அரச நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள நிலை – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

அரச நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள நிலை - அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! | 430 Sl Institutions To Be Sold Or Restructured

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் பல விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி சுமார் 430 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளது.

குறித்த செயற்பாடுகள் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பித்து இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த 430 அரச நிறுவனங்களும் நட்டம் மற்றும் இலாபம் ஈட்டும் உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் விற்கப்படலாம், சில நிறுவனங்கள் மூடப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் அல்லது மறுசீரமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த 430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 சட்டப்பூர்வ சபைகள் உள்ளன.

குறித்த நிறுவனங்களுக்கும் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு மதிப்பீடுகளின்படி, சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் 615 பில்லியன் ரூபாய்களையும், இலங்கை மின்சார சபை 272 பில்லியன் ரூபாய்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 70 பில்லியன் ரூபாயையும், சிலோன் ஷிப்பிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் 4 பில்லியன் ரூபாய்களையும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை 3 பில்லியன் ரூபாய்களையும், தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணைக்குழு 1 பில்லியன் ரூபாய்களையும் நட்டமாக பதிவுசெய்துள்ளன.

இதேவேளை, ஐடிஎன், தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் லங்கா லேலண்ட் லிமிடெட் என்பனவும் நட்டத்தில் இயங்குகின்றன.

இந்தநிலையில், குறித்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சகத்தில் பொது தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button