இலங்கையை காப்பாற்ற தயார் என உலக வங்கி தெரிவிப்பு.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டங்களை பாராட்ட வேண்டும் என உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நலன்புரிப் பயன் வேலைத்திட்டம் குறித்தும் அங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பிட்ட சட்டமூலத்தின் புதிய ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
நலன்புரிப் பயனைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை வெளிப்படைத் தன்மையுடன் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் முன்னெடுக்கப்படும் சேமநலப் பயன் வேலைத்திட்டங்கள் பற்றிய தமது அனுபவங்களை உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது விபரித்துள்ளார்.