வடக்கில் டிப்ளோமா போதனாசிரியர்கள் சேவைக்கு! வெளியான அறிவிப்பு
வடக்கில் 350 டிப்ளோமா போதனாசிரியர்களை ஆசிரிய சேவைக்கு இணைத்து கொள்ளவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமா மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்காக பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.ik மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cfmin.mp.gov.lk எனும் முகவரியில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக (27.05.2023) ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
01. தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
02. பிறப்பு பதிவு சான்றிதழ்
03. பூரணப்படுத்தப்பட்ட தகவல் படிவம் (இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.)
04. விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.)