News

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு | Import Restrictions 300 More Items To Be Relaxed

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 240 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கி அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த ஆண்டு நவம்பர் வரை நீடித்தது.

அதன் பின் அரசாங்கம் பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button