News

பிரதமர் யார்? திடீர் தீர்மானம் – புதிய சர்ச்சை!

அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கான மோதல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசிலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் பசில் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதமர் பதவி குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், கட்சி என்ற வகையில் பொதுஜன பெரமுனவிற்கு தற்போது பிரதமர் பதவி தேவையில்லை எனவும் பசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், பொதுஜன பெரமுன கட்சி தற்போது பசிலின் கட்டுப்பாட்டில் உள்ளமையினால் ​​பிரதமர் பதவி தொடர்பில் கட்சி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பசிலுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்தும், தற்போது பிரதமர் பதவி அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் மத்தியில் பசில் பிரதமர் பதவியை நாசப்படுத்தியதாக பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவி விவகாரத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மொட்டுக்கட்சிக்கான அதிகாரங்கள் மகிந்தவிடம் இருப்பதனால், பிரதமர் பதவியை விட்டு விலகி மகிந்தவுக்கு வாய்ப்பளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் இது தொடர்பில் மகிந்த இதுவரை உத்தியோகபூர்வமாக பிரதமருக்கு அறிவிக்கவில்லை எனவும் பிரதமரின் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button