News

கடலுணவு ஏற்றுமதி – கைகோர்க்கும் இலங்கை, அமெரிக்கா நிறுவனங்கள்!

இலங்கையில் உள்ள கடல் உணவுகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளில் இலங்கையின் கடலுணவு நிறுவனம் (Taprobane Seafoods Sri Lanka) மற்றும் அமெரிக்க கடலுணவு நிறுவனம் (Direct Source Seafood USA) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

இதன்மூலம், 2023ம் ஆண்டில் 20 மில்லியன் பெறுமதியான கடலுணவுகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதுடன், அதற்கு அடுத்த 2024, 2025 ஆம் ஆண்டளவில் அதனை இரு மடங்காக (40 மில்லியன்) அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இயற்கையாகவே உள்ள முக்கியமான இரு கடலுணவுகளை (blue swimming crab and 4-star BAP certified shrimp) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடலுணவு நிறுவனமானது (Direct Source Seafood USA) பல நாடுகளில் இவ்வாறான கூட்டு வர்த்தக செயற்றிட்டங்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இலங்கையின் கடலுணவு நிறுவனத்துடன் பங்குதாரர்களாக கைகோர்த்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தப்ரபேன் கடலுணவு நிறுவனமானது, மிகப்பெரிய அளவில் கடலுணவுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவங்களின் ஒன்று.

இந்த நிறுவனம் பலதரப்பட்ட வசதிகளுடன், ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்த நிறுவனம் வடக்கு மற்றும் வடமேல் மாகாணத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், தற்போது இலங்கை மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து இலங்கையில் இயற்கையாவே கிடைக்கும் நண்டு மற்றும் இறால் ஏற்றுமதியை பொருளாதார ரீதியாக மேற்கொள்ளவுள்ளன.

இந்தக் கூட்டு முயற்சி மூலம், இலங்கையில் உள்ள கடலுணவு நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ரீதியிலான உந்துதல் கிடைக்கும் மற்றும் பாதுகாப்பான மற்றும் தரமான கடலுணவுகளை ஏற்றுமதி செய்யமுடியும் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button