News
உத்தேச ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலம் – எதிர்க்கட்சிகளின் அதிரடி நடவடிக்கை!
உத்தேச ஒலிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியின் நிறைவேற்றுக் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஊடாக எடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஒன்றியத்தினால் விசேட உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த உப குழு எதிர்வரும் வாரமளவில் கூடவுள்ளது. குறித்த உப குழு ஊடாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் விடயங்கள் எதிர்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சகல தலைவர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.