புதுப்பொலிவு பெறும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
ஜப்பானின் ஜய்க்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடனுதவி இடைநிறுத்தப்பட்டமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஜப்பான் விமான நிலைய ஆலோசனை நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை எக்சஸ் நிறுவனம் இந்த நிர்மாண பணிகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா துறைமுக, கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த நடவடிக்கைக்காக 500 மில்லியன் ரூபாய், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தால் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.