News

உக்ரைன் ரஷ்யா சமாதான திட்டம் – பேச்சுவார்த்தைக்கு இணக்கம்!

சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக வெளியாகிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் உலகின் பல நாடுகள் வணிகம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தானியங்களின் விலை உயர்வு மற்றும் போரின் காரணமாக உலக வர்த்தகத்தின் தாக்கம் ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆப்பிரிக்க கண்டம் இந்தப் போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து ஆப்பிரிக்க தலைவர்கள் சமீப மாதங்களில் பேசி ஆலோசனை நடத்தி வருவதாக, தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா கூறியிருந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் குழுவுடன், புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க அதிபரின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.

இதற்காக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, தனது ரஷ்ய மற்றும் உக்ரேனிய சகாக்களுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியுள்ளார் என, அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை பணியில் ரமபோசாவுடன் ஜாம்பியா, செனகல், காங்கோ, உகண்டா மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்கள் சேர திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button