News

ஒரு இலட்சம் ரூபா வரி! வெளிநாட்டை நோக்கி படையெடுக்கும் ஊழியர்கள்.

அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் ஏற்றுமதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வரி அதிகரிப்பை அரசாங்கம் ஒரு எதிர்பார்ப்பை நோக்கி செயற்படுத்தினாலும் அது வேறுவிதமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறுபட்ட மக்கள் கலந்து காணப்படுகின்றனர். இங்கு ஒரு கலாசாரம் காணப்படுகிறது. அதனால் நாங்கள் இவ்வாறான கலந்துபட்ட கலாசாரம் காணப்படும் வேளையில், எங்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி பல்வேறு விடயங்களை செய்வதற்கும் முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி அன்று பதவியில் இருக்கும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடந்த காலத்தில் அவரை விமர்சித்தார்கள். ஆனால் அவர் இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் அனைவரும் தற்போது நண்பர்களாகி விட்டார்கள். ஜனாதிபதியின் புகழ்பாடி வருகிறார்கள்.

அத்துடன் ஜனாதிபதியின் முயற்சிகளில் சில பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய காரணமாவதுடன் அதேநேரம் நேர் மறையான விடயங்களும் காணப்படுகின்றன. ஊழியர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வரியாக அறவிடப்படுகிறது. இதனால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஊழியர்கள் வேறுவிதமாக சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர்.

அதனால் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது வரிகளை குறைக்க வேண்டும். பெரியளவிலான ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அத்துடன் அன்னியச் செலாவனியை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் ஏற்றுமதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வரி அதிகரிப்பை அரசாங்கம் ஒரு எதிர்பார்ப்பை நோக்கி செயற்படுத்தினாலும் அது வேறுவிதமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன.

மேலும் உயர் கல்வியை பெறுகின்ற கவர்ச்சிகரமான இடமாக இலங்கை மாறவேண்டும். அதற்காக முக்கியமான சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சிலர் இதில் இடதுசாரி கொள்கையை புகுத்த முயற்சிக்கின்றனர்.

இலங்கை உயர்கல்விக்கான சிறந்த இடமாக அமையவேண்டும். வெளிநாட்டு மாணவர்களை கவரவேண்டும். தனியார் துறைக்கு போட்டியாக அமையவேண்டும். நாட்டில் இருக்கும் உயர் கல்வி சேவையை வழங்கும் நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் பட்டம் தரம் வாய்ந்ததாக அமையவேண்டும். அந்த தரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் நாங்கள் உயர் கல்வித்துறையில் சரியான முதலீட்டை பெற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் அரசாங்கம் உற்பத்தியை உயர்த்துவதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தபோதும் கடந்தபோகத்தில் விளைந்த நெல்லைக்கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தடுமாறிக் காெண்டிருக்கிறார்கள்.

அவர்களின் நெல்லை விற்பனை செய்வதற்கான விற்பனை விலை மிகவும் குறைந்தளவிலே காணப்படுகிறது. அடுத்த போகத்தில் விவசாயம் செய்வதா இல்லையா என அவர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் மிக விரைவாக உத்தரவாத விலையை நிர்ணயித்து கடந்த போகத்தில் உற்பத்தி செய்த நெல்லை கொள்வனவு செய்ய மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button