ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான தவறான தகவல்களால், நிதியத்திலுள்ள அங்கத்தவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பில் தேவையற்ற ரீதியில் அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர், நிதியத்தின் அங்கத்தவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள அங்கத்தவர்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்திற்குள்ள பொறுப்பை முறையாக அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் முதலாவது மற்றும் நம்பிக்கை மிகுந்த வங்கியாக மக்கள் வங்கி செயற்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது பிரதமர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.