News

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன கூறினார்.

இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர்  குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அஸ்வெசும நிவாரண கொடுப்பனவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, 28 இலட்சம் பேர் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங் கப்படவுள்ளனர். இதனை நாம் 40 இலட்சம் வரை அதிகரிக்க முடியும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெறப்படும் அல்லது பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். உண்மைத் தகவல்களை வழங்காமல் அரசியல் ரீதியாகவும் பல்வேறு வகையிலும் கடந்த காலங்களில் சனசவிய, மற்றும் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை மறுசீரமைப்பு செய்து உண்மையாக கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாகும். ஏழைத்தன்மையை தொடர்ந்து வைத்திருந்து அதன்மூலம் அரசியல் செய்ய நாம் விரும்பவில்லை.

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கப் படாதவர்கள் அவர்களின் கோரிக்கைளை நிகழ்நிலையிலும் அல்லது பிரதேச செயலகத்தில் அல்லது ஜனாதிபதி காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும். அதனை விடுத்து கூக்குரலிட்டு பயனில்லை. எவ்வளவு காலத்துக்கு எம்மால் கூக்குரலிட முடியும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய காலத்திலும் சண்டையிட்டு கொள்கின்றனர். சண்டையிடுவதன் நோக்கம் அவர்கள் அரசாங்கத்துக்கு சரியான யோசனைகளை முன்வைக்க முன்வருவதில்லை. அவர்களிடம் முன்வைப்பதற்கான சரியான திட்டம் எதுவுமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button