News

மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு! புதிய விதிமுறை

அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் இனிவரும் நாட்களில் வழங்கப்படும் விதி முறை தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு என இது இனி அழைக்கப்படும்.

அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

https://iwms.wbb.gov.lk/household/list என்ற இணைய முகவரியில், தெரிவு செய்யப்பட்ட குடும்ப விபரங்களை உங்கள் கிராம சேவகர் பிரிவை தெரிவு செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.

வழங்கப்படவிருக்கின்ற உதவித்தொகை விபரம்

1. மிக வறுமை (Severely Poor) – மாதாந்தம் ரூ. 15,000.00

2. வறுமை (Poor) – மாதாந்தம் ரூ. 8,500.00

3. பாதிப்புக்கு உள்ளானோர் (Vulnerable) – மாதாந்தம் ரூ. 5,000.00

4. நிலையற்ற வருமானம் (Transient) – மாதாந்தம் ரூ. 2,500.00

உதவித் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேன்முறையீடுகள் ஜூலை 10 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேன்முறையீட்டு / ஆட்சேபனைகளை https://iwms.wbb.gov.lk/complaint எனும் இணைய முகவரிக்கு சென்று தெரிவிக்க முடியும்.

அல்லது மேன்முறையீட்டு / ஆட்சேபனை மாதிரி படிவத்தினை https://tinyurl.com/SSNP-PressAD-DSAKP எனும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும்.

அல்லது 1924 என்கின்ற நலன்புரி நன்மைகள் சபையின் விரைவு தொடர்பு எண்ணுக்கு (Hotline) அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button