News
பரீட்சை அட்டவணைகளில் மாற்றம் – சற்றுமுன் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது