மற்றுமொரு செயற்கை நுண்ணறிவு நிறுவனம்: எலான் மஸ்க்கின் புதிய முயற்சி
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ (xAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஓபன்ஏஐ (openai) நிறுவனத்தின் சட்ஜிபிடி (chatgpt) உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு போட்டியாகவே எலான் மஸ்க் மேற்படி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
அத்துடன், இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழிநுட்பமானது எந்தளவிற்கு உலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோ மறுப்புறம், மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் தனது மற்ற நிறுவனங்களான டுவிட்டர் மற்றும் டெஸ்லாவுடன் xAI நெருக்கமாகச் செயல்படும் எனவும் நாங்கள் X Corp-லிருந்து ஒரு தனி நிறுவனமாக செயல்படுவோம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.