News

விசேட தொடருந்து சேவை: யாழ்.தேவி ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு

நல்லூர் திருவிழாவிற்காக விசேட தொடருந்து சேவை: யாழ்.தேவி ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு | Colombo Kankesanturai Special Bus Service

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையிலிருந்து கொழும்பு – காங்கேசன்துறைக்கு விசேட தொடருந்து சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தொடருந்து சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கிச் செல்லும் c10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் தொலைக்காட்சி வசதிகளுடன் இருக்கும். 4 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும்.

தொடருந்து இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம். பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் யாழ். தேவி தொடருந்தில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்துள்ளார்.

மாஹோ – ஓமந்தை இடையிலான வடக்கு தொடருந்து பாதையின் 128 கிலோமீற்றர் பகுதியில், தர மேம்படுத்தல் பணி முடிவடைந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் வடக்குக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குணசிங்க மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button