News

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயம்

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடி வரும் பாகிஸ்தான் அணி சற்று முன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button