News

நாட்டில் உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவதே ஒரே தீர்வு – பந்துல குணவர்தன

“உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதே இச்சமயத்தில் ஒரே தீர்வு , நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஒவ்வொரு உற்பத்தியையும் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாட்டில் போதியளவு டொலர் கையிருப்பு அல்லது இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாத காரணத்தினால் இறக்குமதியில் பெருமளவு தங்கியிருக்க முடியாது.

பாரிய அந்நியச் செலாவணி மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியை எதிர்நோக்கும் இந்த வேளையில் நாடு திவாலாவதற்கு இரண்டு முக்கிய காரணங்களில் ஒன்று, நடப்புக் கணக்கில் நிலுவைத் தொகையின் தொடர்ச்சியான பற்றாக்குறையாகும்.

இறக்குமதி செலவை ஈடுசெய்யும் அளவுக்கு ஏற்றுமதி வருமானம் கிடைக்காததே தற்போது நிலவும் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.

அதேசமயம், மருந்துகள், உரங்கள், இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு வருவதற்கு இது போதாது” என்றார்.

அத்துடன், நமது நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று பற்றாக்குறையை சரி செய்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், இனி கடன் பெற முடியாத போது கடன் பத்திரம் வழங்கப்படும் என்றும் யார் ஆட்சி செய்தாலும் அது சாத்தியமற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுவே யதார்த்தமான நிலைமை, எனவே உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதே தீர்வு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button