News
EPF குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.