News
அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்
சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், அதன் பயனை நுகர்வோர் பெறவில்லை என தெரியவந்துள்ளது.
பல சில்லறை வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
ஒரு கிலோ பாகற்காய் மொத்த விலை 200 ரூபாயாக இருந்தாலும், சில சில்லறை கடைகளில் பாகற்காய் கிலோ 480 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டது.
ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விலை 140 ரூபாவாக இருந்தாலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோவின் விற்பனை விலை 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சமீப நாட்களாக சில்லறை சந்தையில் மற்ற வகை காய்கறிகளும் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இடைத்தரகர்கள் ஊடாக வியாபாரம் செய்வதால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.