நாட்டில் 230 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – சிறிலங்கா சுகாதார அமைச்சு தகவல்
இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் தற்போது 230 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக சிறிலங்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் வாரங்களுக்குள் சுமார் 50 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அந்த வகையில் இந்திய கடன் வசதியை பயன்படுத்தி பற்றாக்குறையாக உள்ள 50 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை உடனடியாகக் கொள்முதல் செய்வதன் மூலம் நாட்டில் மருத்துப் பற்றாக்குறையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்து ஒரு பிரச்சினையாக காணப்படும் மருந்துகளின் பற்றாக்குறையை சமாளிக்க போராடிவருவதாகவும் சிறிலங்கா சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.