கோழி இறைச்சி தொடர்பில் இறுதி கலந்துரையாடல்
கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தொழில்துறையினருடன் இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் எனவும், எனினும் தொழில்துறையினர் அந்தச் சலுகைகளை மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கோழி மற்றும் முட்டை உற்பத்திக்காக செலவிடப்பட்ட நிதியை மீளாய்வு செய்யுமாறு சுகாதார மற்றும் கால்நடை உற்பத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில், இன்று (02) முதல் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.