நாளை முதல் குறுகிய கால பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை.
ஒற்றைப் பாவனை மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலானது நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த புதிய விதியை கடைப்பிடிக்கத் தவறும் வர்த்தகர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் பத்திரகே தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இது தொடர்பான ஆய்வுகள் மற்றும் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படும் என சுபுன் பத்திரகே தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின்படி, நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், கிளறிகள், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள் மற்றும் கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் சரக்கு தட்டுகள் மற்றும் மாலை பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.