News
நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் மின்துண்டிப்பு!
நாட்டில் உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதுமுள்ள 8 இலட்சம் வரையிலானவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதைவிட, உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக நாடு முழுவதும் மேலும் 12 இலட்சம் வரையிலான குடும்பங்களுக்கு (வீடுகள்) சிவப்பு எச்சரிக்கை பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தில் இரு முறைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் பெரும்பாலானவர்களின் மின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அநேகமானவர்களின் பொருளாதார நிலைமைக்கமையவே மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.