நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவுகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்பின் தாக்கத்தினால் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களுக்காக அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களிடம் மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற உணவுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.