News
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி
நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நானடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.