News

உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிறுவியுள்ள புதிய அலகு திட்டம்.

இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் உயர் செல்வந்தர்களின் வரி இணக்கத்தை உறுதி செய்வதற்காக ‘உயர் சொத்து தனிநபர்கள் அலகு’ (HWIU) ஒன்றை நிறுவியுள்ளது.

குறி்த்த அலகானது, நாட்டின் வரி நிர்வாகத்தில் நேர்மை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அதிக வருமானம் மற்றும் அதிக செல்வம் கொண்ட தனிநபர்கள் மீது கவனம் செலுத்துவதற்கும், அவர்கள் தங்களின் நியாயமான பங்களிப்பை உறுதி செய்வதற்கும், சரியான அளவு வரிகளை செலுத்துவதற்கும் கூடுதல் ஆதாரங்களை இவ்வலகு பெற்றுள்ளது.

மேலும், குறித்த அலகினால் பூர்வாங்க நடவடிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான செல்வந்தர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களுடன் இணைந்து அவர்கள் தங்கள் வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வது உறுதிசெய்யப்படும்.

அதேநேரம், அவர்களின் ஆரம்பத் தாக்கல்களிலுள்ள தவறுகள் அல்லது விடுபடல்களைக் கண்டறிந்து தவிர்க்க உதவுவதைத் தவிர, ஐ.ஆர்.டி அதிக அபாயங்களைக் கொண்ட வழக்குகளில் தணிக்கைகளை நடத்துவதற்கு கூடுதல் இடர் மதிப்பீடுகள் மற்றும் பணக்கார வரி செலுத்துவோர் விவரக்குறிப்புகளையும் நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button