News
ரஷ்யா விசா தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்
எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் முன்னாள் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று கொழும்பில் ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரும் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.