News

சமூக ஊடகங்களை கையாளுவதற்கான உயர்மட்டக் குழு நியமனம்.

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குழுவை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நியமித்துள்ளதாக கொழும்பின் (Colombo) ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த குழு அதிபர் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனிக்கும் உச்ச அமைப்பாக செயற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardene) தலைமையில் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முன்னதாக பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksha) இந்தக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் குழுவில் பணியாற்ற மறுத்துவிட்டார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button