News

வாகன இறக்குமதிக்கு வரி விலக்கு இல்லை – பந்துல குணவர்தன

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.

வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். அதன்படி, அன்று முதல் முதல் கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.”

கேள்வி – உரிமம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

பதில் – இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர், உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.

கேள்வி – வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டவுடன், எதிர்காலத்தில் எந்தவொரு உரிமமும் வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதி தொடர்ந்து நிறைவேற்றப்படுமா? அல்லது IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?

“ஒப்பந்தத்தின்படி அந்த நிபந்தனைகள் ஒரு துளிக்கூட மாறாமல் நிறைவேற்றப்படும். இதில் நல்ல ஒரு விடயம் என்னவென்றால் இலவச உரிமத்தின் கீழ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அல்லது யாருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. சில வரி சதவிகிதம் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம்.. அந்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உடன்படுகிறது.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button