சதோச நிறுவனங்களிலும் அரிசிக்கு தட்டுப்பாடு : வெளியான தகவல்
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.
அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ விலை 90 ரூபாவாகவும், கெக்குலு அரிசி கிலோ விலை 85 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராத படியினால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.