‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ‘வோர்ன்-முரளி’ டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு…
தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர் ), திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க (உடற்தகுதியை பொறுத்து ), ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெந்திஸ், குசல் மெந்திஸ், சதீர சமரவிக்ரம, சோனால் தினுஷ, பிரபாத் ஜெயசூர்ய, ஜெஃப்ரி வென்டர்சே, நிஷான் பீரிஸ் , அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலான் ரத்நாயக்க