News

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய முறை குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பில் பேசிய அமைச்சர்,

சம்பந்தப்பட்டவர்ளுக்கான ஓய்வூதிய முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த இரண்டு துறைகளிலும் உள்ளவர்ளுக்கு இதை வலுவான முறையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மேலும், நமது சுற்றுலாத் துறையில் சாரதிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மறைமுகமாக சுற்றுலாத் துறையில் பணிபுரியும் பலர் வயதாகும்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கும் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. சமூக வலுவூட்டல் அமைச்சகத்தில் ஏற்கனவே ஒரு சமூகப் பாதுகாப்பு நிதி உள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்கனவே அந்த நிதியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் மூலம், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஏற்கனவே ஒரு ஓய்வூதிய முறை உள்ளது.

ஆனால் பல வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது தெரியாது. இந்த நிதி அல்லது பங்களிப்பு ஓய்வூதிய முறை மூலம் நிறுவப்பட்ட ஓய்வூதிய முறை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். “வலுவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இரு துறைகளிலும் உள்ளவர்களுக்கு இதை அறிமுகப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button