News
தபால் திணைக்களத்தினால் வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிந்துள்ள முகவரியில் உள்ள உரிய தபால் திணைக்களத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகளை தபால் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.
எனினும் 29ஆம் திகதிக்குள்ளாக தங்களது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வாக்குகளை பதிவு செய்துள்ள முகவரிக்கு உரித்தான தபால் நிலையங்களில் அவற்றை நேரடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.