News

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் சட்ட உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1968 ஆம் ஆண்டு 25 ஆம் எண் பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மேலும் இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு நபர், நிறுவனம் அல்லது பிற தரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை நடைமுறையில் உள்ள காலகட்டத்தில், புலமைப்பரிசில் தேர்வை இலக்காகக் கொண்டு வகுப்புகளை ஏற்பாடு செய்வது அல்லது நடத்துவது, பாடம் தொடர்பான விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது, போலி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கலம் என விளக்கமளித்துள்ளார். இதன்படி பொதுமக்கள் பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி எண் 011-2421111, பொலிஸ் அவசர தொலைபேசி எண் 119, பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி எண் 1911 அல்லது 011-2784208 மற்றும் 011-2784537 ஆகியவற்றின் மூலம் புகார்களை சமர்ப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button