Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas. The best online casinos combine exciting games with transparent terms. Detailed wagering requirement breakdowns for non-GamStop bonuses appear at Casinos-Not-on-GamStop. Start your journey today. https://rtg-casinos.org/
News

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்!

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘பொருளாதார நிலைமாற்றம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை வர்த்தக சபை இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. அரசியல் ஸ்திரத்தன்மை, கடன் மறுசீரமைப்பு மற்றும் இறையாண்மை, கடன் தரநிலையை மேம்படுத்துதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மாற்றத்திற்கு இலங்கையை தயார்படுத்துவதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும். அத்தோடு இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டில் சகலவித பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த ஆண்டு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், அந்த இலக்கை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

நாங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் அதிகாரத்தில் இருக்காத ஒரு அரசியல் இயக்கமாகும். கடந்த காலத்தில் வணிகக் குழுக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தில் சிலருக்கு எங்களைப் பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், தற்போது அந்த சந்தேகத்தை நீக்கி, அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால போக்கில் நம்பிக்கையை வளர்க்க முடிந்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் நாங்கள் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 4% க்கும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இதுவொரு சவாலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு சவாலாக நாங்கள் கருதுகிறோம். நாங்கள் பல துறைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறோம்.

குறிப்பாக, வரவிருக்கும் பட்ஜெட்டில் 1.35 டிரில்லியன் ரூபாயை அரசாங்க முதலீட்டு மூலதனச் செலவினங்களாகச் செலவிட எதிர்பார்க்கிறோம். இது சமீபத்திய காலங்களில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிட்ட மிகப்பெரிய தொகையாக இருக்கும்.

முந்தைய அரசாங்கங்களின் செயற்திறனின்மை காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. சுமார் 75% – 80% மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால் இந்த ஒதுக்கப்பட்ட பணத்தை முழுமையாகச் செலவிட தேவையான வழிமுறையை நாங்கள் தயாரித்து வருகிறோம்.

அண்மையில் முதலீட்டுடன் தொடர்புள்ள அமைச்சுக்களின் மற்றும் அரச அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தினோம். பொதுவாக எமது நாட்டிற்கு முதலீடுகளை பெற 82 நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என்பது தெரியவந்தது.

அந்த அறிக்கையின்படி, இந்த நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் செல்லும். சுற்றுச்சூழலுக்கான அனுமதி பெறக்கூடிய 11 நிறுவனங்கள் உள்ளன. இதற்கு 269 நாட்கள் ஆகும். நடைமுறையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் செல்கிறது. இதை 82 நாட்களாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒரு முதலீட்டுத் திட்டத்திற்கு 8 நிறுவனங்களிடமிருந்து ஏனைய அனுமதிகளைப் பெற வேண்டும். நடைமுறையில், அதற்காக 184 வாரங்கள் கடந்துவிடுகிறது. இதை 102 நாட்களாகக் குறைக்க முடியும் என நாங்கள் கருதுகிறோம்.

ஒரு திட்டத்தை மதிப்பீடு செய்து முடிவெடுக்க முதலீட்டு சபைக்கு 80 நாட்கள் ஆகும். இதை இரண்டு வாரங்களாகக் குறைப்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக இருந்தால், அந்நிய நேரடி முதலீட்டிற்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

சுற்றுலாத் துறையில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. இந்த ஆண்டு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பற் துறைகளில் முன்னேற்றத்தை அடைய முடியும். மேற்கு இறங்குதுறையில் செயல்பாடுகள் இந்த மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு இறங்குதுறையில் செயல்பாடுகள் ஜூலை மாதத்திற்குள் தொடங்க முடியும். எனவே, கடல்சார் துறையில் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். நாம் விரும்பும் பொருளாதார வளர்ச்சியை அடைய முன்னுரிமை அளிக்க வேண்டிய பல துறைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே, இந்த இலக்குகளை வெற்றிகொள்ள முடியும்.

சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கான எங்கள் உடன்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் துறைமுகத்தில் விநியோக மையத்தை மிக விரைவில் தொடங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதலீட்டுச் சபையில் பல திட்டங்கள் முடங்கியுள்ளன. அந்தத் திட்டங்களை விரைவாக முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான அனுமதிகள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தியா மற்றும் சீனாவுடன் பல முக்கிய திட்டங்கள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். எனவே, நாட்டிற்கு கணிசமான அளவு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.

முந்தைய அரசாங்கங்கள் முதலீட்டை ஈர்ப்பதில் தவறிவிட்டன. மேலும், முதலீட்டு வாரியம் திறமையாக செயல்படவில்லை. எனவே, பொருளாதார நிலைமாற்றச் சட்டத்தின் மூலம் ஒரு புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் அதில் முழுமையான முறைமை கிடையாது. தற்போதைய அரசாங்கம் பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை திருத்தங்களுடன் செயல்படுத்த எதிர்பார்க்கிறது.

கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன. அரசியல் தரப்பு மறைந்துள்ள எதனையோ செயல்படுத்தப் போகிறது என்ற எண்ணமே அரச பொறிமுறைக்குள் எப்போதும் காணப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்போது அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வசதி, செயல்திறன் என்பவைகளை மட்டுமல்லாமல் நாட்டை இருக்கும் இடத்திலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் இயலுமையும் காணப்படுகிறது. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் அரச பொறிமுறையை டிஜிட்டல்மயமாக்கலை கட்டாயமாக செய்ய வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை பற்றிய போலிக் கதைகளை அறிவியல் ரீதியாக உடைத்து புதிய உலகத்திற்கு ஏற்ற அடையாளத்தை உருவாக்கும் இயலுமை காணப்படுகிறது. அதற்காக இந்திய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாய் அன்பளிப்பையும் வழங்குகிறது.

நிர்வாகத்திற்கென ஒரு புதிய வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இதுவரையில் காணப்பட்ட அரச நிர்வாகம் தோல்வியடைந்த மற்றும் ஊழல் மிகுந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும், அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவான செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, சில அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து அவற்றின் பங்குகளை சேகரித்து பங்குச் சந்தைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். சில நிறுவனங்களில் செய்ய வேண்டிய விடயங்கள் எவையும் இல்லை. காலத்தின் தேவைக்கேற்ப இந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டாலும், தற்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கான செயற்திட்டங்கள் எவையும் இல்லை. ஒரு துறைக்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தின் ஏற்றுமதி வருமாத்தில் 90% ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. சுங்க வருமானத்தில் 69%இனை கோப்புகள் 621 பெற்றுத் தருகின்றன. மேலும், மேல் மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 37% பங்களிப்பை வழங்கிவரும் நிலையில், ஊவா மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 5% பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. பொருளாதாரத்தை சிறு குழுக்களின் கையில் வைத்துகொண்டு பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியாது.

அஸ்வெசும சலுகைகள் 1.8 மில்லியன் பேருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இன்னும் தகுதியான குழுக்கள் உள்ளன. கிராமிய வறுமையை ஒழிக்க புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கிராமத்திற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இது நடக்கும்போது, மக்களின் கொள்வனவுச் சக்தியை அதிகரித்து கிராமிய வறுமையை ஒழிக்க முடியும்.

இலங்கையில் இதுவரையில் ஒருவரை நபரை இலக்காகக் கொண்டு உதவி வழங்கும் வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஒருவரை இலக்கு வைத்து மாடு அல்லது கோழிகுஞ்சுகள் வழங்கப்பட்டன. அது வெற்றியளித்திருந்தால் தற்போது அதிகளவான பண்ணைகள் இருக்க வேண்டும். எனவே, தற்போதைய அரசாங்கம் சமூகத்தை வலுப்படுத்த புதிய பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நியகளுக்குள் இருந்து உதவி தேவைப்படும் பயனாளிகளுக்கான திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்களிடம் நிதி ஊக்கத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்ட திட்டம் எம்மிடம் உள்ளது. இந்த நாட்டின் சலுகை வழங்கல் முறை முற்றிலும் அரசியலாக்கப்பட்டிருந்தது. அதை நிறுத்துவோம். உரியவருக்கு சலுகை வழங்கும் முறையை ஆரம்பித்துள்ளோம்.

சுதந்திரமான சந்தை என்று கூறினாலும் உலகில் சந்தை சுதந்திரமானதாக இல்லை. உலகச் சந்தை பிரிந்து வேறுபட்டுள்ளது. அவ்வாறு பிரிந்து கிடக்கும் சந்தையில் நமது பங்கை கையகப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதற்காக, இலங்கைக்கு நெருக்கமான இந்தியாவின் சந்தையுடன் உலக சந்தையை அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவுடனான முன்னைய வர்த்தக ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதன் நன்மை, தீமைகளைக் கருத்தில் கொண்டு, புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உலகச் சந்தையின் பங்கைப் கைப்பற்ற எதிர்பார்க்கிறோம்.

உலகம் அறிக்கைகளால் முன்னேறிச் செல்லவில்லை. தற்போது அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளால் முரண்பாடு அல்லது அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாகலாம் என்று கருத முடியும். ஆனால் உலகம் அறிக்கைகளோடு நின்று விடாது.

நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அரச சேவையை வழங்க அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. அரச சேவையில் 1.3 மில்லியன் பேர் உள்ளனர்.அடிமட்ட அரச ஊழியர்களின் அளவு தன்னிறைவாக காணப்பட்டாலும் இடைநிலை அரச ஊழியர் எண்ணிக்கையில் பற்றாக்குறை உள்ளது. இதற்காக தேர்வு நடத்தினால், தனியார் துறையில் பணிபுரிபவர்களும் வருகின்றனர். தனியார் துறையினால் ஈர்க்கப்படாத அரச துறையில் ஈர்க்கப்படும் பொதுச் சேவையே இங்கு உள்ளது. எனவே, தனியார் துறையும் சேவைகளை வழங்குவதற்கான இடம் என்ற கருத்தாடலை உருவாக்க வேண்டும்.

1991 அரச தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் முப்பத்திரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாவை வழங்க முடியாமல் உள்ளது. அவ்வாறிருக்கையில் அந்த நிறுவனங்கள் வெற்றியளிக்குமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். நேற்று சுங்கத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கொள்கலன்கள் திறக்கப்பட்டன. அவற்றை கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை.

ஆனால், கொள்கலன்கள் திறந்து பார்த்தபோது, பிரபல நிறுவனத்தின் லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன. எனவே, மக்கள் தங்கள் மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் அதிகார தரப்பிற்குரிய பண்புகளை நாம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், உங்களுக்குள் மாற்றம் ஏற்படாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோரும் வணிகச் சபையின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button