News

நோயாளியை பார்வையிட சென்றவருக்கும், வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் முறுகல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடு (26.11.2022) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 26ஆம் திகதி மதியம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

நேயாளரை பார்வையிட மறுப்பு

இதன்போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகஸ்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள், வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என தெரிவித்து நோயாளியை பார்க்கச் சென்றவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் தபாலக ஊழியர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,

நோயாளரை பார்வையிடுவதற்கு வந்தவரே முதலில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தலைக்கவசத்தினால் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அவரை தாக்கியுள்ளனர்.

தலைக்கவசத்தினால் தாக்கல்

இந்நிலையில் தலைக்கவசத்தினால் தாக்கியவர் அந்த நேரம் போதையில் இருந்ததாக அறிய முடிகிறது.

தாக்குதலில் காயமடைந்த, நோயாளரை பார்வையிட வந்தவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நோயாளரை பார்வையிடுவதற்கு வருபவர்கள் வெற்றிலையோ மதுபானமோ பாவித்துவிட்டு வரக்கூடாது.

இதற்கமைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இவ்வாறு தாக்குதலை மேற்கொள்ள முடியாது.

சி.சி.டி.வி ஆதாரங்கள்

அத்துடன் இரு தரப்பும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button