News

எடை அடிப்படையில் முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பழுப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவென என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்திருந்த நிலையில், இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் பழுப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button