News

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 284.17 முதல் ரூ. 283.20 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 299.45 முதல் ரூ. 298.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூ. 283.83 முதல் ரூ. 282.02  ஆகவும், ரூ. 298 முதல் ரூ. 297 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 285 மற்றும் ரூ. 297 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மாற்றம் | Dollar Rate Banks Today Exchange Rates

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button