News
கம்பளை பகுதியில் நில அதிர்வு!
கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10.49 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நில அதிர்வுகளே ஏற்பட்டதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வு மஹாகனதரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
புபுரஸ்ஸ பிரதேசம் இதன் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.