News

இறுதி போட்டியில் இலங்கை வெற்றி

உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் ஹராரே மைதானத்தில் மோதிய நிலையில், நாணய சுழற்சியில் நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றது.

எனினும் அந்த அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி  47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Sahan Arachchige அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், அணித் தலைவர் Kusal Mendis 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சாா்பில் Logan van Beek, Ryan Klein, Vikramjit Singh, Saqib Zulfiqar ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  நெதர்லாந்து அணி 23.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

நெதர்லாந்து அணி சாா்பில் Max O’Dowd அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சாா்பில் Maheesh Theekshana 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button