News

காங்கேசன்துறை – இந்தியா இடையே கப்பல் சேவை: ஆரம்ப திகதி குறித்து வெளியான தகவல்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,

ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் இந்தியா சென்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button