News

தாமதமாகும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் : வெளியானது காரணம்

சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் தாமதமாகி பயணங்களை மேற்கொள்வதற்கான காரணம் விமானங்களின் பற்றாக்குறையே என விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது தினசரி விமான சேவைக்கு 24 விமானங்கள் தேவை என்ற போதிலும் 20 விமானங்களே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இரண்டு A.-330 மற்றும் A.-320 விமானங்கள் நீண்டகால அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

A.-320 Neo குழு விமானங்கள் பிரான்சில் உள்ள Airbus நிறுவனத்திடம் இருந்து புதிய இயந்திரங்களைப் பெறும் வரை மேலும் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் சுமார் 30 பேர் அதிலிருந்து வெளியேறி வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குச் சென்றுள்ளதால் எஞ்சியுள்ள ஊழியர்கள் தேவையான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, வியாழக்கிழமை (28) காலை வரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷின் டாக்காவிற்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகின.

இந்த விமானங்கள் தாமதமாக வருவதால் தனது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், விரைவில் இந்த பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button