News
உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கச்சா எண்ணெய் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, டொலரின் பெறுமதி வலுவடைந்து வருவது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 81 டொலர் 27 சதங்களாக குறைந்துள்ள நிலையில், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 76 டொலர் 14 சதங்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2030 டொலர் 90 சதங்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.