News

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே திட்டமிட்டபடி படகுச் சேவை ஆரம்பமாகும்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் துறைமுகங்களுக்கு இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், சண்டே ரைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைகடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கேசன்துறை - காரைக்கால் இடையே திட்டமிட்டபடி படகுச் சேவை ஆரம்பமாகும் | Srilanka India Board Service Will Stat

ஆரம்பத்தில் படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும், ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த படகுப் பயணமானது 04 மணித்தியால பயண நேரம் என்பதுடன் பயணி ஒருவர் 100 kg பொதி வரை கொண்டு செல்ல முடியும்.

இதற்கான ஒருவழிக்கட்டணமாக – 50 அமெரிக்க டொலர் அளவிடப்பட்டுள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button